Friday, 22 July 2011

நோர்வேயில் பாரிய குண்டுவெடிப்பு


  நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் அரசாங்க கட்டிடங்களுக்கு அண்மையில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்து இதில் குறைந்தது இதுவரையில் ஒருவர் இறந்ததாகவும் 8 பேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகிறது. மேலும் இதில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் இருந்த அரச கட்டிடங்கள் மற்றும் அதன் பாகங்களும் பலத்த சேதத்திற்குட்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ள. 

மேலும், இந்த குண்டுவெடிப்பின் நோர்வே பிரதமர் வீட்டிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பிரதமருக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. 

இச் சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ஒஸ்லோவில் அமைந்திருக்கும் இலங்கை தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளதுஇ எனினும் பாதிப்புக்கள் தொடர்பாக மேலும் அவதானிப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

No comments:

Post a Comment

Hot Toppics