நமக்கு யாரேனும் மின்னஞ்சலில் புகைப்படங்கள்(jpg,png,gif), டாகுமென்ட்(doc,xls,ppt) மற்றும் PDF கோப்புக்களை அனுப்பினால் நாம் இந்த கோப்புகளை நம்முடைய கணணியில் தரவிறக்கம் செய்து பின்னர் ஓபன் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
கூகுள் டாக்ஸ்(Google Docs) உதவியுடன் ஓன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நமக்கு வழங்கி உள்ளது. இதனால் நமக்கு தரவிறக்கம் செய்யும் நேரம் குறைகிறது.
ஆனால் நமக்கு அனுப்பப்படும் கோப்புக்கள் கம்ப்ரெஸ்(.zip .rar) கோப்புக்களைாக இருந்தால் நம்மால் ஓன்லைனில் அந்த கோப்புக்களை பார்க்க முடியாது தரவிறக்கம் செய்து தான் பார்க்க முடியும்.
தற்பொழுது கூகுள் இந்த பிரச்சினையை தீர்க்க புதிய வசதியாக .Zip .Rar கோப்புக்களை இனி தரவிறக்கம் செய்யாமலே ஓன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியையும் வழங்கி உள்ளது.
இதன்படி உங்களுக்கு Rar, zip கோப்புக்களை யாரேனும் அனுப்பினால் அதை ஓன்லைனில் பார்க்க அந்த கோப்புக்கு அருகில் உள்ள View என்பதை க்ளிக் செய்தால் உங்களுக்கு அந்த Zip, rar கோப்புக்களில் உள்ள அனைத்து கோப்புக்களையும் காட்டும். அதில் உங்களுக்கு தேவையானதை ஓபன் செய்து பார்த்து கொள்ளலாம்.
உங்களுக்கு அனுப்பிய .Zip, .Rar கோப்புக்களுக்கு உள்ளே இன்னொரு Zip(or)Rar கோப்புக்கள் இருந்தாலும் Actions என்பதை க்ளிக் செய்தால் இன்னொரு சிறிய விண்டோ வரும். அதில் View கொடுத்தால் அதனையும் பார்த்து கொள்ளலாம். இது போல எத்தனை Rar, Zip கோப்புக்கள் இருந்தாலும் அதனை தரவிறக்கம் செய்யாமலே பார்த்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment