Wednesday, 13 July 2011

தனுஷ் உடன் ஸ்ருதி நடிப்பது உறுதி

”இரண்டாம் உலகம்” படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்கப் போவது அவர் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் புதிய படம் தான் என்பது உறுதியாகியுள்ளது.
கமல் மகள் ஸ்ருதி தான் இந்தப் படத்தின் நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இடையில், ஸ்ருதியுடன் தனுஷ் நடிக்க மறுத்தார் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிப்பது குறித்து ஸ்ருதியுடன் ஐஸ்வர்யாவே பேசி வருகிறாராம். எனவே கண்டிப்பாக அவர் நடிப்பது உறுதி என்கிறார்கள் ஐஸ்வர்யா தரப்பில்.
ரஜினியின் வருகைக்குப் பிறகு இந்தப் படத்தை அறிவிக்கக் காத்திருந்தார் ஐஸ்வர்யா. இன்று ரஜினி வருகிறார். எனவே இந்த வாரம் பட அறிவிப்பு வரக்கூடும். ரஜினியின் வாழ்த்துடன் ஓகஸ்டில் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

Hot Toppics