Friday, 15 July 2011

புதுப்பொலிவுடன் ‘சங்கிலியன்’ வருகிறான்

 யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் உருவச் சிலையை புதுப்பொலிவுடன் உருவாக்குவதற்காக பழைய சிலை மாநகரசபையால் அகற்றப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

யாழ். மாநகரசபையின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் இறுதியாக நடைபெற்ற மாநகர பொதுக்கூட்டத்தில் முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டுள்ள சங்கிலிய மன்னனின் சிலையை உடைத்து புதிய சிலையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முவைத்தனர். இதற்கு எதிரணி உறுப்பினர் விந்தன் சிலையை அகற்றாது புனரமைப்பு செய்யுமாறு கோரியுள்ளார். எனினும் ஆளும் தரப்பால் இது முழுமையாக புனரமைக்க வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதனடிப்படையில் மாநகரசபையால் சங்கிலியனின் சிலை அகற்றப்பட்டு சிலை இருந்த பகுதி முற்றுமுழுதாக மறைக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Hot Toppics