Thursday, 21 July 2011

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள்

இன்று நீங்கள் கூகுள் தேடல் பொறியை உபயோகப்படுத்தும் போது கீழ் காட்டப்படுள்ளவாறு ஓர் எச்சரிக்கை செய்தி தோன்றினால் உங்கள் கணனி 'மெல்வெயாரி'னால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதனைத் தெரிவித்தது நாங்கள் அல்ல கூகுள். 

ஆம், உங்கள் கணனி பாதிக்கப்பட்டதுள்ளதினையே கூகுள் இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது. 

இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட போலியான 'அண்டி வைரஸ்' மென்பொருட்களே உங்கள் கணனி பாதிக்கப்பட பிரதான காரணமென கூகுள் தெரிவிக்கின்றது. 

மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளையே 'மெல்வெயார்' தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது. 

இவ்வாறான தகவல் தோன்றினால் உங்கள் கணனியை உடனே பரீட்சிக்குமாறும் தேவையானால் சம்பந்தப்பட்ட விபரங்கள் மற்றும் ஆலோசனைகளை கூகுளிடமிருந்துபெற்றுக்கொள்ள முடியுமெனவும் அது குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக தகவல்களைக் கூகுளின் வலைப்பூவில்தெரிந்துகொள்ளலாம் _

No comments:

Post a Comment

Hot Toppics