பெரும் எதிர்ப்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள படம் மங்காத்தா. காரணம் அஜித்தின் 50வது படம் என்பது மட்டுமல்ல... முதல் முறையாக அஜித்தும் அர்ஜூனும் இணைந்து நடித்துள்ள மல்டி ஸ்டாரர் படம் இது. த்ரிஷா,லட்சுமிராய், வைபவ், பிரேம் ஜி என பெரும் நட்சத்திரப்பட்டாளமே உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எப்படிப் பார்த்தாலும் இந்தப் படம் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்குமே நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருந்தாலும், படத்தினை வாங்கி திரையிடுவதில் சிக்கல்கள் உள்ளதாக கூறி சூடேற்றிவிட்டிருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். தமிழக ஆட்சிமாற்றத்தால் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழுதோ தெரியவில்லை ஆனால் தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நடந்தேறிவருகிறது.
மங்காத்தா திரைப்படத்தினை தயாநிதி அழகிரி பேனரில் வெளியிட்டால் விஜயின் காவலன் வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சினைகளை மங்காத்தாவுக்கும் எதிர்நோக்க வேண்டிவருமோ என்று விநியோகஸ்தர்கள் அச்சத்தில் உள்ளனர் இதே நிலைதான் திரையரங்க உரிமையாளர்களிடமும் காணப்படுகிறது.
இப்போது படம் முழுவதும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், இதன் கேரள, ஆந்திர மற்றும் வெளிநாட்டு உரிமைகள் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால் தழிழகத்தில் இன்னும் வியாபாரம் ஆகவில்லையாம் படம். இத்தனைக்கும் அம்மா ஆளுதான் அஜித், இருந்தும் இதற்காகவெல்லாம் அம்மாவை சந்திக்க முடியாது என்றும் படத்தை தைரியமாக தயாநிதி பேனரில் வெளியிடுங்க என்றும் கூறுகிறாராம் நம்ம தல.
மங்காத்தா வருமா? வராதா?
வருமா? வராதா
ReplyDeleteஇதுலேயே மங்காத்தா ஆட்டம் ஆரம்பமா?