Friday, 22 July 2011

நாசாவின் அட்லாண்டிஸ் விண்கலத்தின் இறுதிப்பயணம் நிறைவடைந்தது(Video இணைப்பு)

  அட்லாண்டிஸ் விண்கலத்தின் இறுதிப் பயணத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அமெரிக்காவின் விண்கலத் திட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. 

சர்வதேச விண்வெளி மையத்தியத்தினை அமைக்க தேவையான பொருட்களை கொண்டு சென்ற அட்லாண்டிஸ் தனது கடைசி பயணத்தினை முடித்துக்கொண்டு நேற்று பூமிக்குத் திரும்பியது. 


அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படுகிறது. 

இம்மையத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு, "நாசா' பல விண்கலங்களை அனுப்பியுள்ளது. 

அட்லாண்டிஸ் கடந்த மாதம் 8 திகதி 4 விண்வெளி வீரர்களுடன் விண்வெளியை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது. 

பின்னர் தாம் கொண்டு சென்ற பொருட்களை அங்கு ஒப்படைத்ததுடன் அங்கு காணப்பட்ட தேவையற்ற பொருட்களுடனும் அட்லாண்டிஸ்கேப் கெனரவல் விமானப்படை தளத்தில் நேற்று தரையிறங்கியது. 

நாசா இதுவரை கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் என்டர் ஆகிய விண்கலங்கள் மூலம் 135 விமானங்களை விண்வெளி மையத்துக்கு அனுப்பியுள்ளது. 

முதல் முதலாக அமெரிக்கா 1983 ஆம் ஆண்டு சேலன்சர் என்ற விண்வெளி ஓடத்தை ஏவியது. 

அட்லாண்டிஸ் தரையிறங்கியதைத் தொடர்ந்து (1981 ஏப்., 12 - 2011 ஜூலை 21), அமெரிக்காவின் 30 ஆண்டுகால விண்வெளிப்பயணம் முடிவுக்கு வந்தது. இதன்பின் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்புவதில்லை என்று "நாசா' முடிவு செய்துள்ளது

No comments:

Post a Comment

Hot Toppics