Tuesday, 12 July 2011

அவருக்கு 50 இவருக்கு 38

தீவிர அஜீத் ரசிகர்களும் புள்ளி விபரப் புலிகளும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லலாம். ஒரு தெலுங்கு படம், ஒரு இந்திப்படத்துடன் இதுவரை அஜீத் நடித்த படங்களின் எண்ணிக்கை 49 என்கிறார்கள் சில சினிமா புள்ளிவிபரமறிந்த சிலர். ஆனால் மங்காத்தா அவரது 50 வது படம் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள் அப்படக் குழுவினர். 

இதே போல இன்னொரு பிரச்சனையால் சிக்கி தவிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். சமீபத்தில் வந்த அவரது பிறந்த நாளுக்கு போஸ்டர் அடித்த ரசிகர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அடித்தார்களாம். அவரவர் விருப்பத்திற்கேற்ப 38 என்றும் 40 என்றும் 41 என்றும் அடித்து தள்ளியிருக்கிறார்கள். ஆனால் விஜய் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்ட இந்த வருடத்தின் அதிகாரபூர்வ வயது 38 மட்டும்தான்.

நீங்கதாய்யா சொல்லணும் ஒரு தீர்வு.... நல்லா பாருங்கையா

No comments:

Post a Comment

Hot Toppics