இது குறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவிக்கையில்,
'கஜினி' படத்தில் முதன் முதலாக இந்த மூவர் கூட்டணி அமைந்தது, படமும் அபார வெற்றி பெற்றது.
சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இக்கூட்டணி '7ஆம் அறிவு' படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி கமல்ஹாசன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இம்மாத இறுதியில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment