மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி (ஹூஜி) அமைப்பைச் சேர்ந்த ஒருவரை பீகாரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் ரியாவுல் சர்கார். கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்நதவர். இவர் தற்போது ஐ.பி. எனப்படும் இன்டலிஜென்ஸ் பீரோவிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் ஐ.பி. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வுக் குழுவினரும் சர்காரை விசாரிக்கவுள்ளனர்.
மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சர்கார் கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment