கமல் நடிப்பில் 100 கோடி ரூபா செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் விஸ்வரூபம். உலகில் இதுவரை எவரும் பார்த்திராத பகுதிகளில் இந்தப் படத்தைப் படமாக்கப் போகிறாராம் கமல். அதற்காக உலகை சுற்றிவந்து படப்பிடிப்புக்கான பல்வேறு இடங்களையும் தெரிவுசெய்துள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் விஸ்வரூபத்துக்கான படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தொடர்ந்து 45 நாட்களுக்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஸ்வரூபமெடுக்க கமல் தயாராகிவிட்டாலும் அவரது விஸ்வரூபத்துக்கு ஏற்ற நாயகி இன்னமும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமே.
No comments:
Post a Comment