Friday, 15 July 2011

'இலங்கையின் கொலைக்களங்கள்' அமெரிக்க நாடாளுமன்றின் செனட் சபை அங்கத்தவர்கள் பார்வையிடவுள்ளனர்.

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த 'இலங்கையின் கொலைக்களங்கள்' எனும் ஆவணப் படத்தை அமெரிக்க நாடாளுமன்றின் செனட் சபை அங்கத்தவர்கள் பார்வையிடவுள்ளனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடி குழு மற்றும் பகிரங்க சமூக மன்றம் ஆகியன அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் டொம் லன்டோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து  அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்ற கேட்போர் கூடத்தில் இந்த ஆவணப்படத்தை இன்று வெள்ளிக்கிழமை திரையிடவுள்ளன.

டொம் லண்டோஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைத்தலைவரான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் மெக்கோவர்ன், இந்த ஆவணப்படம் குறித்த அறிமுகத்தை வழங்குவார்.

இப்படம் திரையிடப்பட்டதன் பின்னர், ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை உட்பட இலங்கையின் பொறுப்புடமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து மேற்படி குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.

No comments:

Post a Comment

Hot Toppics