சிறுநீரக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற நடிகர் ரஜினிகாந்த், நேற்று இரவு சென்னை திரும்பினார். |
கடந்த மாதம் உடல்நிலை கோளாறு காரணமாக சென்னை, போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், ரஜினிகாந்திற்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து, நிபுணர் குழுவினர் அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு, கடந்த மே மாதம் 27ம் தேதி அழைத்துச் சென்றனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று சென்னை திரும்பினார். நேற்று இரவு 10.10 மணிக்கு, சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த அவர், விமான நிலைய வருகை மையத்தின் வரவேற்பு அறையின் பிரமுகர்கள் தங்கும் இடத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர், அவருக்காக தயாராக இருந்த இன்னோவா காரில், ரஜினிகாந்த் வீட்டிற்கு புறப்பட்டார். அவருடன், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் வந்தனர். ரஜினிகாந்தை வரவேற்க, சென்னை விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து ரஜினி கையசைத்தார். பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை திரும்பிய ரஜினி,கேளம்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் சில வாரங்கள் ஓய்வு எடுக்கிறார். அதன்பிறகு ராணா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். <object style="height: 390px; width: 640px"><param name="movie" value="http://www.youtube.com/v/h4FwV7vMOdo?version=3"><param name="allowFullScreen" value="true"><param name="allowScriptAccess" value="always"><embed src="http://www.youtube.com/v/h4FwV7vMOdo?version=3" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="390"></object> |
Thursday, 14 July 2011
சென்னை திரும்பினார் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த்
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
Hot Toppics
-
தீவிர அஜீத் ரசிகர்களும் புள்ளி விபரப் புலிகளும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லலாம். ஒரு தெலுங்கு படம், ஒரு இந்திப்படத்துடன் இதுவரை அஜீத்...
-
மங்காத்தா தயாரிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில், தலையின் அடுத்த படமான பில்லா2 தயாரிப்பில்; அடியெடுத்து வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக ...
-
கனடா அருகே அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உள்ளது. இங்கு பசிபிக் கடலில் உள்ள அலேடியன் தீவுகள் அருகே கடலோர பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நில ந...
-
- சாதனைகளை பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. எனது வெற்றியின் ரகசியமே அதுதான் இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்...
-
என் தாய் மொழியான பஞ்சாபி மாதிரி, தமிழும் பாரம்பரியமான மொழி. கத்துக்கறதுக்குதான் கஷ்டமா இருக்கு என்று சோனியா அகர்வால் சொன்னபோது அய்யோ பாவமாக ...
No comments:
Post a Comment