பொது மக்களை பாதுகாக்க லிபியா சென்றுள்ள நேட்டோ படைகள் தலைநகர் திரிபோலியிலும் தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக கடாபி இருப்பிடத்தில் இந்த தாக்குதல் நடைபெறுகிறது. இராணுவ மையங்களிலும் தாக்குதல் நடைபெறுகிறது.
மேற்கத்திய படைகளின் தாக்குதலை எதிர்த்து வந்த கடாபி தற்போது பதவி விலக தயாராகி உள்ளார். இதுகுறித்து அவரது அதிகாரிகள் பிரான்சின் தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூபே கூறினார்.
லிபியா தூதர்கள் துருக்கி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் பேசி வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் பிரதமர் பிரான்கய்ஸ் பிலான் நாடாளுமன்ற கொமிஷனில் கூறுகையில்,
"லிபியாவில் அரசியல் தீர்வு மிக முக்கியமானதாக உள்ளது. அங்கு உரிய அமைப்பு ஏற்பட இந்த நடவடிக்கை தேவைப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
லிபியா பிரதமர் பகாதி அல் மகமூதி கூறுகையில்,"நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் உடனடியாகக் குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment