Sunday, 17 July 2011

மங்காத்தாவில் கவர்ச்சியில்லை : த்ரிஷா

மங்காத்தாவுல "சாமி"  படத்துல நடிச்ச மாதிரி குடும்பப்பாங்கான வேடத்தில் நடிச்சிருக்கேன், கவர்ச்சியாக நடிக்கவில்லை என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
 "மங்காத்தா"  பட அனுபவம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், சமீபகாலமாக நான் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஆனால் அஜீத்துடன் நான் நடித்து வரும் ”மங்காத்தா” கண்டிப்பாக வெற்றி பெறும் என நினைக்கிறேன்.
காரணம் ” மங்காத்தா” ஒரு சீட்டாட்டத்தின் பெயராக இருந்தாலும் மனிதர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஆட்டமாக இருக்கும் என்பதுதான்.
இதை மனதில் கொண்டுதான் இயக்குநர் வெங்கட் பிரபு இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்.
அதேபோல படத்தின் கதையையும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் எல்லோருமே போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறோம். அதனால் ”மங்காத்தா” கண்டிப்பாக வெற்றி பெறும் என்று என்னால் திட்டவட்டமாக இப்போதே சொல்ல முடியும்.

இந்தப் படத்தில் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. ”சாமி” படத்தில் நடித்தது மாதிரி குடும்பப்பாங்கான வேடம்தான்.
புடவை, பாவாடை- தாவணி உடையில்தான் வருகிறேன். ஆனாலும் இளைஞர்கள் எதிர்பார்க்கிற, அளவான கவர்ச்சி இருக்கும்.
இந்தக் கவர்ச்சியை மின்னல்போல் அனைவரையும் தாக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
அதனால் இந்தப் படம் நிச்சயம் என்னை மீண்டும் பிஸியான நடிகையாக மாற்றும் என நம்புகிறேன், என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Hot Toppics