Sunday, 17 July 2011

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் வேண்டும்: அமெரிக்கா

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை சட்டத்தரணிகளும் கோரியுள்ளனர்.

இலங்கையின் போர்க்குற்றங்களை விபரிக்கும் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற சனல் 4 காணொளி நேற்று அமெரிக்க கெப்பிட்டல் கட்டடத் தொகுதியில் காண்பிக்கப்பட்டது. இந்தக் காணொளி 50 நிமிடங்களைக் கொண்ட காட்சிகள் உள்ளடங்கியிருந்தன.

இந்த காட்சிப்படுத்தலை அடுத்து கருத்து தெரிவித்த, அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைத்தலைவர் James McGovern ஜேம்ஸ் மெக்கோவன், குறித்த காணொளி மனிதத்துவத்தின் சீரழிவை எடுத்துக்காட்டியதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் குறித்த காட்சிகள் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார். மெக்கோவன், அமெரிக்க ஜனா திபதி ஒபாமாவின் ஜனநாயக கட்சி James McGo-ve-rn மெசாசூசெட்ஸ் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினராவார். போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், சர்வதேசம் அந்த இடத்திற்கு பொறுப்பாகச் செல்லவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

காணொளிக்காட்சிகளின் அடிப்படையில் இலங்கைப்படையினரோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளோ யாராக இருந் தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மெக்கோவன் வலியுறுத்தினார்.

அமெரிக்காவில் இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியை ஒளிப்பரப்புவதற்கு சர்வதேச மன்னிப்பு சபையின் அமெரிக்காவுக்கான முகாமைப்பணிப்பாளர் அஞீணிtஞுடி அடுதீஞுடி எடோடி அகவெய் ஏற்பாடுகளை செய்திருந்தார. _

No comments:

Post a Comment

Hot Toppics