இதில் நமக்கு வேண்டிய குறிச்சொற்களைக் கொடுத்தால் அது சம்பந்தப்பட்ட படங்கள் இணையத்தில் இருப்பின் எல்லாவற்றையும் பட்டியலிட்டு விடும். சில சமயம் சாதாரணத் தேடலில் கிடைக்காத விடயம் படத்தேடலின் போது எளிதாகக் கிடைக்கலாம். நாள்தோறும் கோடிக்கணக்கான படங்கள் தேடப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
உங்களுக்கு ஒரு விடயத்தைப் பற்றி தேடும் போது சமீபத்திய புதிய புகைப்படங்கள் மட்டுமே வேண்டும் என நினைக்கக் கூடும். அதற்கு நாம் வருடத்தைக் குறிப்பிட்டுத் தேடினாலும் சில சமயம் நாம் விரும்பிய புகைப்படங்கள் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.
அப்படியெனில் இணையதளங்களில் புதியதாக சேர்க்கப்பட்ட புகைப்படங்களை எப்படி காண்பது? இதற்கு ஒரு வழி இருக்கிறது. கூகுள் படத்தேடலில் நுழையாமல் கூகிள்.காம் இணையதளத்திற்குச் செல்லவும். உங்களுக்கு வேண்டிய தகவலை முதலில் அடித்தவுடன் முடிவுகள் பட்டியலிடப்படும்.
பின்னர் இடப்புறம் உள்ள பட்டியில் Past 24 hours, past one week, custom range என்ற மெனுக்கள் இருக்கும். அதில் உள்ள கால அளவுகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இல்லை குறிப்பிட்ட நாட்களுக்குள் சேர்க்கப்பட்ட படங்கள் மட்டும் வேண்டும் என்றால் Custom Range என்பதைக் கிளிக் செய்து ஆரம்ப திகதி மற்றும் முடிவு திகதியைத் தேர்வு செய்து கொள்ளவும்.
பின்னர் அதன் கீழே இருக்கும் Site with Images என்பதைக் கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்த திகதிக்குள் சேர்க்கப்பட்ட புகைப்படங்களைப் பட்டியலிடும். இந்த முறையானது துல்லியமான முடிவுகளைத் தராவிட்டாலும் ஒரளவு சரியான புதியதான புகைப்படங்களைப் பட்டியலிடும்.
useful post. Thank you for sharing.
ReplyDeleteநன்றிங்க..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
Good and useful information.
ReplyDeleteThanks. T P Selvam