நிவ்சவுத் வேல்ஸ் பெற்றோர்களின் அமைப்பே இக் கோரிக்கையை விடுத்துள்ளது.
இவ்வமைப்பில் சுமார் 2,200 பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் அங்கம் வகிக்கின்றனர்.
இணையத்தினூடாக குறிப்பாக சமூக வலையமைப்புகளினூடாக இடம்பெறும் குற்றங்கள் மற்றும் மோசடிகளை தவிர்ப்பதற்காகவே இம் முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சமூகவலையமைப்புகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் இன ரீதியான, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களினால் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய வகுப்புகள் மூலம் மாணவர்கள் இணையம் மற்றும் சமூக வலையமைப்புகள் தொடர்பில் தெளிவான அறிவினைப் பெறக்கூடியதாக இருக்குமென அப்பெற்றோர் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இதனை கல்வித்திட்டத்தில் சேர்க்கும் படி அவ்வமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை சில பாடசாலைகள் இத்தகைய வகுப்புக்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நன்றி இணையம்
No comments:
Post a Comment