டுவிட்டாராவது? பேஸ்புக்காவது? சமூக வலைத்தளம் நாங்கள் வெளியிட்டால?..- மைக்ரோசொப்ட்
மைக்ரோசொப்ட்டிடமிருந்து மற்றுமொரு படைப்பாக டுலாலிப் (Tulalip)என்ற பெயரில் சமூகவலைத்தளம் ஒன்றை நிறுவியுள்ளனர். இது அண்மையில் Socl.com என்ற தளத்தின் மூலம் பயனர்களின் பார்வைக்க பரீட்சார்த்தமாக விடப்பட்டிருந்தது ஆனால் தற்போது அந்த இணைய முகவரிக்கு சென்று பார்வையிடும் போது இது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உள்ளக பரீட்சார்த்த வேலைத்திட்டமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தவறுதலாகவே வலைத்தளமாக விடப்பட்டதாகவும் மேலும் இத்தவறுக்கு தாங்கள் பொறுபேற்க முடியாது எனவும் அப்பக்கத்தில் காண்பிக்கப்படுகிறது.
டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் ஏனைய சமூக இணையத்தளங்களுக்கு போட்டியாகவே இதை வெளியிடுகின்றனர் என்று அடுத்த கணமே வதந்திகளும் பரப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சமூக வலைததளமொன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது.
இங்கு தள வெளியீட்டில் அசைக்க முடியாத இடம் பிடித்திருக்கும் மைக்ரோசெப்ட் நிறுவனத்தின் டுலியபானது(Tulalip) டுவிட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு பாரிய சவாலாகவே அமையும்.
டுலாலிப் (Tulalip)வெளிவருமா? இல்லையா?
No comments:
Post a Comment