Thursday, 21 July 2011

வெளிவருகிறது மர்லின் மன்றோவின் அந்தரங்கக் காட்சிகள் அடங்கிய குறும் படம்


  மறைந்த ஹொலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் அந்தரங்கக் காட்சிகள் அடங்கிய குறும் படமொன்றினை ஏலத்தில் விடவுள்ளதாக ஸ்பானிய பழையபொருட்களை சேகரிக்கும் நபரொருவர் தெரிவித்துள்ளார். 

இப்படம் தொடர்பாக பழம்பொருட்களை சேகரிக்கும் நபரான மைக்கல் பார்ஸா, 6 1/2 நிமிடங்கள் வரை உள்ள இவ்அந்தரங்க காட்சிகள் அடங்கிய வீடியோவின் மூலம் தான் 500,000 டொலர் பணத்தினை சம்பாதிக்க முடியுமெனவும் மேலும், எற்கனவே சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இப்படத்தின் 600,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். 

ஆனால், சினைவுச்சின்னங்கள் நிபுணர் ஸ்கொட் போர்னர் இவ் வீடியோ சம்மந்தமாக கூறுகையில் மக்கள் பழைய கையிருப்பு படங்கள் மூலம் இலகுவாக பணம் சம்பாதிக்கின்றனர் என்றும் இந்த வீடியோவில் காண்பிக்கப்படுவது மர்லின் மன்ரோ இல்லை எனவும் கூறுகிறார். 

எது எவ்வாறாயினும் இந்த குறும் படத்தின் மூலம் எப்படியும் மைக்கல் பார்ஸா பணம் சம்பாதிப்பார் என்பது மட்டும் திண்ணம்... 

No comments:

Post a Comment

Hot Toppics