
இவற்றினை கைப்பற்றினர் அந்நாட்டு போலீசார். அவற்றை மொத்தமாக அடுக்கி வைத்து தீயிட்டு கொளுத்தும்படி அந்நாட்டு அதிபர் மிவாய் கிபாகி உத்தரவிட்டார்.
சிங்கப்பூர், தான்சானியா , மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு விற்பனைக்காக கடத்தி வரப்படுவதாக கென்யா அரசுக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி நேற்று 335 யானைகளிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட 40 ஆயிரம் தந்தங்களை கென்யா அரசு பறிமுதல் செய்தது. கென்யாவின் தெற்கு மாகாணமான முன்யானி எனப்படும் பகுதியில் இந்த தந்தங்கள் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டன.
அதிபர் மிவாய்கிபாகி , முன்னிலையில் அவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனை அதிபரே முன்னின்று நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், இனிமேல் கென்யாவிற்கு சட்டவிரோத வியாபார நடவடிக்கைகள் இருக்கக்கூடாது.
அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கு முன்னோடியாக தான் இந்த யானை தந்தங்கள் எரிக்கப்பட்டன என்றார். இவற்றை தவிர தாய்லாந்து, நைஜிரீயா, காங்கோ ஆகிய நாடுகளிலும் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவதாக உலக வனப்பாதுகாப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment