இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ராஜா இயக்குகிறார்.
இப்படத்திற்காக ஆரம்பத்தில் போடப்பட்ட பட்ஜெட் ரூ.35 கோடியாம். ஆனால் இப்போது படத்தில் கொம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பாடல்கள் பிரம்மாண்டம் அது, இது என்று ரூ.10 கோடி அதிகரித்து விட்டதாம்.
இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஓஸ்கார் ரவிச்சந்திரன் சற்று கலக்கத்தில் இருக்கிறாராம். ஆனால் அதே சமயம் இது விஜய் படம், கவலைப்படாதீர்கள் போட்ட காசுக்கு மேலாக எடுத்துவிடலாம் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருவதால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாராம்.
விஜய் படம் என்றாலே அதிரடி சண்டைக் காட்சிகள், கலக்கல் பாடல்கள், கொமெடி, காதல், செண்டிமெண்ட் என்று எல்லாமே இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அதேபோல் இந்தபடத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment