Thursday, 21 July 2011

த்ரிஷாவுக்கு திருமணம்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா தற்போது தமிழில் "மங்காத்தா" தெலுங்கில் "பாடிகார்ட்" என இரு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சும்மா இருந்தாலும் இவரைப்பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும் தற்போது வெளியாகியிருக்கும் தகவலானது இவரை கனவுக்கன்னியாக எண்ணிக்கொண்டிருக்ம் இளசுகளின் நெஞ்சை சற்று காயப்படுத்தக்கூடும்.

திரிஷாவுக்கு
பிறகு சினிமாவுக்கு வந்த பல நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இவருக்கு வயது ஏறுவதால் திருமணம் எப்போது என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திரிஷாவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே திரிஷாவின் தாய் உமாகிருஷ்ணன் ரகசியமாக வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

தொழில் அதிபர்கள், மருத்துவர்கள் என பல வரன்கள் பார்க்கப்பட்டன. இறுதியாக இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம். ஒருவர் அமெரிக்க மாப்பிள்ளை அங்கு தொழில் அதிபராக இருக்கிறார். இன்னொருவர் உள்ளூர் மாப்பிள்ளை. இருவரில் திரிஷா யாரை தேர்வு செய்கிறாரோ அவருடன் திருமணம் நடைபெறும்.
திரிஷாவுக்கு தற்போது தமிழில் "மங்காத்தா", தெலுங்கில் "பாடிகார்ட்" என இரு படங்கள் கைவசம் உள்ளன. வேறு புதுப்படங்களுக்கு ஒப்பந்தம் ஆகவில்லை. இரு படங்களையும் முடித்ததும் திருமண ஏற்பாடுகள் நடக்கும் என தெரிகிறது.

மாப்பிள்ளை தேர்வு செய்துள்ளது உண்மைதானா என்று திரிஷாவிடம் கேட்ட போது, வழக்கமாக நடிகைகள் மறுப்பது போலவே மறுத்தார்.
அவர் கூறுகையில்,"எனக்கு திருமணம் நடக்கப் போவதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை. எனக்கு பொருத்தமானவரை எப்போது சந்திக்கிறேனோ, அப்போதுதான் திருமணம் செய்து கொள்வேன்" என்றார்.


No comments:

Post a Comment

Hot Toppics