Thursday, 14 July 2011

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆஷஸ் போன்றது: ஸ்ட்ரோஸ்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள், ஆஷஸ் தொடரை போன்று கடினமானது,'' என, இங்கிலாந்து டெஸ்ட் அணிட் தலைவர் ஸ்ட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்துக்கு அணிகள் முதல் டெஸ்ட் போட்டி லோர்ட்ஸ் மைதானத்தில் வரும் 21இல் துவங்குகிறது.

டெஸ்ட் அரங்கில் முதல் அணியாக உள்ள இந்திய அணியை வெல்வது என்பது ஆஷஸ் தொடரை போன்று சற்று கடினம் தான். இருந்தாலும், இந்த போட்டிகள் சொந்த மண்ணில் நடைபெறுவதால் எங்களுக்கு சாதகமாக அமையும் என நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணியை வீழ்த்த முயற்சிப்போம். அணியில் திறமையான வீரர்கள் உள்ளதால், சிறப்பான வெற்றியை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. முன்னணி அணியை எதிர்கொள்வது என்பது அதிக உற்சாகத்தை கொடுத்துள்ளதால் சிறப்பான செயல்பாட்டை நாங்கள் அனைவரும் வெளிப்படுத்த இருக்கிறோம்.

சர்வதேச கிரிக்கெட்டில் இது போன்ற சவால்கள் இருந்தால் தான் அது ரசிக்கும்படியாக இருக்கும். மூன்று அனுபவ தலைவர்க்ளின் கீழ் இங்கிலாந்து அணி செயல்படுவது நல்ல விடயம் தான். ஒரு நாள் போட்டிகளின் தலைவர் குக், மற்றும் "இருபது-20' தலைவர் பிராட் இருவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இவ்வாறு ஸ்ட்ரோஸ் கூறினார். 

No comments:

Post a Comment

Hot Toppics