Sunday, 17 July 2011

அப்ரிடி இன்னும் பக்குவம் அடையாதவர்: கம்பீர்

பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவர் அப்ரிடி இன்னும் பக்குவம் அடையவில்லை என்று இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு, இந்த வெற்றியை மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக கம்பீர் தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள கம்பீர், 'மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு உலகக் கிண்ண வெற்றியை அர்ப்பணிப்பதாகக் கூறியது எனது தனிப்பட்ட கருத்து.

அப்ரிடி 16 வயதில் பாகிஸ்தான் அணிக்கு விளையாட வரும்போது பக்குவமடையாமல் எப்படி இருந்தாரோ, அதேபோன்றுதான் இப்போதும் உள்ளார்."

2007-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியின் போது கம்பீருக்கும்-அப்ரிடிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கம்பீருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்துப் கருத்து தெரிவித்த கம்பீர், 'அந்த சம்பவத்தின் மூலம் சிறிய பிரச்னைகளுக்கு எல்லாம் கட்டுப்பாட்டை இழக்கக்கூடாது என தெரிந்துகொண்டேன். அப்ரிடியுடனான அந்த மோதல் சம்பவம் எனது தனிப்பட்ட பிரச்னை. அவர் என்னை திட்டினார். அதுகுறித்து இங்கு பேச விரும்பவில்லை.

மேலும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் களத்தில் கீப்பிங் செய்யும்போது தேவையில்லாமல் உரக்கக் குரல் எழுப்புவார். அவர் மட்டுமல்ல பாகிஸ்தானைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் இந்தப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். எல்லா விக்கெட் கீப்பர்களும் கம்ரான் போன்றவர்கள் அல்ல. இந்திய அணித் தலைவர் தோனி களத்தில் இருக்கும்போது ஒருபோதும் தேவையில்லாமல் சத்தம்போடமாட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஓட்டம் குவித்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக விளையாடுவதைத்தான் விரும்புகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி, ஆஷஸ் தொடர் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஐபிஎல் போட்டியின்போது காயமடைந்தபோது, அதை முன்னால் அணித் தலைவர் பிஷன் சிங் பேடி விமர்ச்சித்தது தேவையில்லாததது. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் இந்த விஷயத்தில் தவறாக புரிந்துகொண்டுள்ளார். நான் ஐபிஎல் போட்டியின்போது காயமடையவில்லை. லேசான சிராய்ப்புதான் ஏற்பட்டது. எல்லா வீரர்களுக்குமே சிராய்ப்பு ஏற்படுவது வழக்கமானதுதான்" என்றார். 

No comments:

Post a Comment

Hot Toppics