என் தாய் மொழியான பஞ்சாபி மாதிரி, தமிழும் பாரம்பரியமான மொழி. கத்துக்கறதுக்குதான் கஷ்டமா இருக்கு என்று சோனியா அகர்வால் சொன்னபோதுஅய்யோ பாவமாக இருந்தது. தமிழ் மொழியை சோனியா மனசில் திணிப்பதை விட, அவரது உடல்மொழியை ரசிகனின் நெஞ்சில் திணிப்பதே தனது லட்சியம் என்கிற நோக்கத்தோடு வந்திருப்பார் போலிருக்கிறது டைரக்டர் ராஜ்கிருஷ்ணா. இவர் இயக்கவிருக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் சோனியாவின் கெட்டப், ஒரு குவார்ட்டரை ராவா அடிச்சதுக்கு சமம்! துவக்க விழாவன்று படமாக்கப்பட்ட அந்த குரூப் டான்சில் சென்ட்டர் பிகராக நின்றிருந்த சோனியாவை பார்த்தவர்களுக்கு நாம் சொன்னதன் அர்த்தம் 'ஃபுல்லாகவே' புரிந்திருக்கும்.
அண்ணே, நடிகையை இந்த சமுதாயம் எப்படி எப்படியோ பார்க்குது. ஆனால் அவங்களுக்கு இருக்கிற கஷ்டங்கள், வேதனைகள் இவற்றையெல்லாம் ஏன் கவனிக்க மாட்டேங்குது? ஒரு நடிகையை சுற்றியிருக்கிறவங்க எல்லாருமே சந்தோஷமா இருக்காங்க. ஆனால் அந்த நடிகை அப்படி இருக்காளான்னு கேட்டா, நான் இல்லைன்னுதான் சொல்வேன். மற்றவங்களுக்காக தன்னையே வருத்திக்கிற அந்த நடிகையை பற்றி இந்த சமுதாயம் வச்சுருக்கிற அபிப்ராயம் ரொம்ப தப்பாயிருக்கு என்று ஹியூமன் ரைட்ஸ் நீதிபதி மாதிரி பேசிக் கொண்டே போனார் ராஜ்கிருஷ்ணா.
கிழிஞ்ச சாக்குல கீரையை கட்டுன மாதிரி, இவரோட நியாயங்கள் அங்கங்கே பசுமையா வெளிப்பட்டாலும் சோனியாவின் ரீ என்ட்ரிக்கு இந்த கவர்ச்சி தேவைப்படுதே என்ன செய்ய? ஒரு நடிகையே கவலைப்படாத விஷயங்களை அலசுவதுதான் ஒரு நடிகையின் வாக்குமூலமா இருக்க முடியும். என்ன சார்... நாங்க சொல்றது சரிதானே?
No comments:
Post a Comment