அடெல் பின் மொஹமட் அசிரி என்ற நபர் பலாத்காரமாக வேறொரு நபரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
பின்னர் அந்நபரின் மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதுடன், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தவும் முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருடன் சேர்ந்த்து இந்த வருடத்தில் மாத்திரம் சவூதியில் 32 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
சவூதியில் கடுமையான இஸ்லாமிய சட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
மரணதண்டனை நிறைவேற்றுவதை உடனே குறைக்குமாறு சவூதி அரசிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த மாதம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment