
தனது எஜமானை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்ட இந்தனேசிய பணிப்பெண்ணுக்கு பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மன்னிப்பு வழங்கியதையடுத்து கடந்து புதன்கிழமை ஜஹார்த்த திரும்பியுள்ளார்.
மேற்கு ஜாவா பிரதேசத்தை சேர்ந்த குறித்த பணிப்பெண் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற எஜமானை தனது சுய பாதுகாப்பிற்க்காக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2009 மே மாதம் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
எனினும் இவருக்கு மன்னிப்பு வழங்குவதற்காக இந்தனேசிய அரசாங்கம் நட்டஈடாக 534,884 அமெரிக்க டொலரை வழங்கியது.
தனிநபர் உரிமை என்பதனால் அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்க முடியாது. குறித்த குடும்பம் மாத்திரமே ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்க முடியும் அல்லது நல்லிணக்கத்தின் மூலம் நட்டஈட வழங்க முடியும்.
இந்நிலையில், இந்தனேசிய பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதை போன்று ரிஸானா நபீகிற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன
No comments:
Post a Comment