உலக பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் 2ம் திகதி அமெரிக்க படைகளின் தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்நிலையில் ஒசாமா அபோதாபாத்தில் ஒளிந்திருப்பதை மேலும் உறுதி செய்ய அவரது குடும்பத்தினரின் டி.என்.ஏ மாதிரிகளை சேகரிக்க அமெரிக்கா போலி மருத்துவ முகாம் ஒன்றை அந்த நகரத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
அங்கிருந்தவர்கள் ரத்த மாதிரிகள் அந்த முகாமின் போது சேகரிக்கப்பட்டன. இதற்காக பாகிஸ்தான் மருத்துவர் ஒருவரை அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் அந்த மருத்துவர் ஒசாமா தங்கியிருந்த வீட்டின் காம்பவுன்ட் சுவரை தாண்டி உள்ளே சென்ற போதும், ஒசாமா தங்கியிருந்ததை பார்க்கவோ அல்லது அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளை சேகரிக்கவோ முடியவில்லை என அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment