Friday, 22 July 2011

நோர்வேயில் பாரிய குண்டுவெடிப்பு


  நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் அரசாங்க கட்டிடங்களுக்கு அண்மையில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்து இதில் குறைந்தது இதுவரையில் ஒருவர் இறந்ததாகவும் 8 பேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகிறது. மேலும் இதில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் இருந்த அரச கட்டிடங்கள் மற்றும் அதன் பாகங்களும் பலத்த சேதத்திற்குட்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ள. 

மேலும், இந்த குண்டுவெடிப்பின் நோர்வே பிரதமர் வீட்டிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பிரதமருக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. 

இச் சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ஒஸ்லோவில் அமைந்திருக்கும் இலங்கை தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளதுஇ எனினும் பாதிப்புக்கள் தொடர்பாக மேலும் அவதானிப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

பேஸ்புக் கணக்கை கூகுள் ப்ளசில் அப்டேட் செய்வதற்கு

கூகுள் பிளஸை பயன்படுத்த தொடங்கியவர்கள் அதிலிருந்தே பேஸ்புக் கணக்கையும் அப்டேட் செய்யலாம்.
முதலில் பேஸ்புக்கில் லொகின் செய்துwww.facebook.com/mobile எனும் பக்கத்தில் நடுவில் இருக்கும் இலக்கங்களுடனான மின்னஞ்சல் முகவரியை கொப்பி செய்து கொள்ளுங்கள்.
கூகுள் ப்ளஸ் சர்க்கிள் பக்கத்திற்கு சென்று Facebook என்ற சர்க்கிளை உருவாக்கி பேஸ்புக் அப்டேட் மின்னஞ்சல் முகவரியை மட்டும் தந்து சேமியுங்கள்.
இனிமேல் கூகுள் ப்ளசில் கருத்து தெரிவிக்கும் பொழுது புதிய பேஸ்புக் சர்க்கிளை சேர்த்து notify by email என்ற பொக்ஸையும் செக் செய்து விடுங்கள்.
இவ்வாறு செய்தபின் கூகுள் ப்ளஸில் நீங்கள் சொல்லும் விடயங்கள் உடனடியாக பேஸ்புக்கிலும் அப்டேட் ஆகிவிடும்.

மின்னஞ்சலுக்கு வரும் Zip கோப்புக்களை ஓன்லைனிலேயே பார்ப்பதற்கு

கூகுள் வழங்கும் இலவச மின்னஞ்சல் சேவை நிறுவனமான ஜிமெயிலில் வாசகர்களின் பயன்பாட்டிருக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றனர்.
நமக்கு யாரேனும் மின்னஞ்சலில் புகைப்படங்கள்(jpg,png,gif), டாகுமென்ட்(doc,xls,ppt) மற்றும் PDF கோப்புக்களை அனுப்பினால் நாம் இந்த கோப்புகளை நம்முடைய கணணியில் தரவிறக்கம் செய்து பின்னர் ஓபன் செய்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
கூகுள் டாக்ஸ்(Google Docs) உதவியுடன் ஓன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியை ஜிமெயில் நமக்கு வழங்கி உள்ளது. இதனால் நமக்கு தரவிறக்கம் செய்யும் நேரம் குறைகிறது.
ஆனால் நமக்கு அனுப்பப்படும் கோப்புக்கள் கம்ப்ரெஸ்(.zip .rar) கோப்புக்களைாக இருந்தால் நம்மால் ஓன்லைனில் அந்த கோப்புக்களை பார்க்க முடியாது தரவிறக்கம் செய்து தான் பார்க்க முடியும்.
தற்பொழுது கூகுள் இந்த பிரச்சினையை தீர்க்க புதிய வசதியாக .Zip .Rar கோப்புக்களை இனி தரவிறக்கம் செய்யாமலே ஓன்லைனிலேயே பார்த்து கொள்ளும் வசதியையும் வழங்கி உள்ளது.
இதன்படி உங்களுக்கு Rar, zip கோப்புக்களை யாரேனும் அனுப்பினால் அதை ஓன்லைனில் பார்க்க அந்த கோப்புக்கு அருகில் உள்ள View என்பதை க்ளிக் செய்தால் உங்களுக்கு அந்த Zip, rar கோப்புக்களில் உள்ள அனைத்து கோப்புக்களையும் காட்டும். அதில் உங்களுக்கு தேவையானதை ஓபன் செய்து பார்த்து கொள்ளலாம்.
உங்களுக்கு அனுப்பிய .Zip, .Rar கோப்புக்களுக்கு உள்ளே இன்னொரு Zip(or)Rar கோப்புக்கள் இருந்தாலும் Actions என்பதை க்ளிக் செய்தால் இன்னொரு சிறிய விண்டோ வரும். அதில் View கொடுத்தால் அதனையும் பார்த்து கொள்ளலாம். இது போல எத்தனை Rar, Zip கோப்புக்கள் இருந்தாலும் அதனை தரவிறக்கம் செய்யாமலே பார்த்து கொள்ளலாம்.

கனடாவை நோக்கி நகர்ந்துவரும் பாரிய கீறீன்லாந்து பனிக்கட்டி: கப்பல்களுக்கு எச்சரிகை _


  கிறீன்லாந்திலிருந்து உடைப்பெடுத்த மிகப் பெரிய பனிக்கட்டியொன்று கனடாவின் நியுபவுண்லேண்ட் கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் அப்பகுதியூடாக பயணிக்கும் கப்பல்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப் பனிக்கட்டியின் நீளம் 6.2 மைல்கள் என்பதுடன் அகலம் 3.1 மைல்களாகும். 

இது கடந்த வருடம் கீறீன்லாந்தில் உள்ள பீட்டன்மேன் பனிப்பாறையிலிருந்து உடைந்து விழுந்த கட்டியென தெரிவிக்கப்படுகின்றது. 

அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட வெப்ப அதிகரிப்பே இது உடைந்து வீழ்ந்ததிற்கான காரணமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

சராசரியாக 6 முதல் 7 மைல்கள் வேகத்தில் இது நகர்ந்துவருவதாகவும் சிலவேளைகள் 11 மைல்கள் வேகத்தினை அடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லாத போதிலும் செய்மதித் தொழிநுட்பத்தின் மூலம் இதனை அவதானித்துவருவதாக கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். _

பிக்பாஸ் ஷோவில் நிர்வாணமாக தரிசனம் தர பூனம் பாண்டேவுக்கு ரூ.2 கோடி சம்பளம்? _


  பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியில் மாடல் அழகி பூனம் பாண்டே நிர்வாணமாக தரிசனம் தர தர, ரூ.2 கோடி பேரம் நடக்கிறது. 

கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா கோப்பையை வென்றால், கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடப் போவதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் மாடல் அழகி பூனம் பாண்டே. இந்தியா உலக கோப்பையை வென்றாலும், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தனது முடிவை அவர் வாபஸ் பெற்றார். 

வீரர்களுக்காக மட்டும் தனியாக நிர்வாண ஷோ நடத்த தயார் என்று அறிவித்தார். ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை. 

இந்நிலையில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில், பங்கேற்க, அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதற்கு ரூ.2 கோடி சம்பளமும் தருவதாக நிகழ்ச்சியாளர்கள் அவரை உற்சாகப்படுத்தி உள்ளனர். 

இந்த ஷோவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார். பூனம் கலந்து கொள்ளும் பட்சத்தில், அவர் பூனமிடம் ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அளித்த வாக்குறுதி (நிர்வாண போஸ்) குறித்து கேட்பார். 

அப்போது நிகழ்ச்சியில் பூனம் நிர்வாண போஸ் தர வேண்டிய நிலை ஏற்படும். 2 கோடி ரூபாய் சம்பளம் தருவதாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறியுள்ள நிலையில், என்ன முடிவு எடுப்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம் பூனம். 




நாசாவின் அட்லாண்டிஸ் விண்கலத்தின் இறுதிப்பயணம் நிறைவடைந்தது(Video இணைப்பு)

  அட்லாண்டிஸ் விண்கலத்தின் இறுதிப் பயணத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அமெரிக்காவின் விண்கலத் திட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. 

சர்வதேச விண்வெளி மையத்தியத்தினை அமைக்க தேவையான பொருட்களை கொண்டு சென்ற அட்லாண்டிஸ் தனது கடைசி பயணத்தினை முடித்துக்கொண்டு நேற்று பூமிக்குத் திரும்பியது. 


அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படுகிறது. 

இம்மையத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு, "நாசா' பல விண்கலங்களை அனுப்பியுள்ளது. 

அட்லாண்டிஸ் கடந்த மாதம் 8 திகதி 4 விண்வெளி வீரர்களுடன் விண்வெளியை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தது. 

பின்னர் தாம் கொண்டு சென்ற பொருட்களை அங்கு ஒப்படைத்ததுடன் அங்கு காணப்பட்ட தேவையற்ற பொருட்களுடனும் அட்லாண்டிஸ்கேப் கெனரவல் விமானப்படை தளத்தில் நேற்று தரையிறங்கியது. 

நாசா இதுவரை கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் என்டர் ஆகிய விண்கலங்கள் மூலம் 135 விமானங்களை விண்வெளி மையத்துக்கு அனுப்பியுள்ளது. 

முதல் முதலாக அமெரிக்கா 1983 ஆம் ஆண்டு சேலன்சர் என்ற விண்வெளி ஓடத்தை ஏவியது. 

அட்லாண்டிஸ் தரையிறங்கியதைத் தொடர்ந்து (1981 ஏப்., 12 - 2011 ஜூலை 21), அமெரிக்காவின் 30 ஆண்டுகால விண்வெளிப்பயணம் முடிவுக்கு வந்தது. இதன்பின் விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்புவதில்லை என்று "நாசா' முடிவு செய்துள்ளது

அமெரிக்காவில் மோசமான அனல் காற்று: 22 பேர் பலி _


  அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களைத் தாக்கிய அனல் காற்றால் இதுவரை 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 

குறித்த பிராந்தியங்களின் சில பகுதிகளில் 43 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தென் டகோடாவில் பெருந்தொகையான கால்நடைகள் இக் காலநிலை காரணமாக உயிரிழந்துள்ளன.

மேலும் நியூயோர்க்கில் குளிரூட்டிகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து எதிர்வரும் தினங்களில் மின்சார துண்டிப்புகள் இடம்பெறலாம் என மின்சார பாவனை நிறுவனமான கொன்எடிஸன் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் சுமார் 50 சதவீதமான மக்கள் வெப்பநிலை அதிகரிப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். 

அந்நாட்டில் ஒவ்வொரு வருடமும் அதிக வெப்பநிலையால் சராசரியாக 162 பேர் வரை உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

வெளிவருமா மங்காத்தா? _


  அஜித்தின் 50ஆவது திரைப்படமான மங்காத்தாவை எத்தினத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை ஆரம்பித்ததிலிருந்து அப்போ வரும் இப்போ வரும் என்று தேதிகள் மட்டுமே குறித்தார்கள் தவிர எதுவும் நிறைவேறிய பாடில்லை.

பெரும் எதிர்ப்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள படம் மங்காத்தா. காரணம் அஜித்தின் 50வது படம் என்பது மட்டுமல்ல... முதல் முறையாக அஜித்தும் அர்ஜூனும் இணைந்து நடித்துள்ள மல்டி ஸ்டாரர் படம் இது. த்ரிஷா,லட்சுமிராய், வைபவ், பிரேம் ஜி என பெரும் நட்சத்திரப்பட்டாளமே உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எப்படிப் பார்த்தாலும் இந்தப் படம் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்குமே நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருந்தாலும், படத்தினை வாங்கி திரையிடுவதில் சிக்கல்கள் உள்ளதாக கூறி சூடேற்றிவிட்டிருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். தமிழக ஆட்சிமாற்றத்தால் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழுதோ தெரியவில்லை ஆனால் தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நடந்தேறிவருகிறது.

மங்காத்தா திரைப்படத்தினை தயாநிதி அழகிரி பேனரில் வெளியிட்டால் விஜயின் காவலன் வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சினைகளை மங்காத்தாவுக்கும் எதிர்நோக்க வேண்டிவருமோ என்று விநியோகஸ்தர்கள் அச்சத்தில் உள்ளனர் இதே நிலைதான் திரையரங்க உரிமையாளர்களிடமும் காணப்படுகிறது.

இப்போது படம் முழுவதும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், இதன் கேரள, ஆந்திர மற்றும் வெளிநாட்டு உரிமைகள் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால் தழிழகத்தில் இன்னும் வியாபாரம் ஆகவில்லையாம் படம். இத்தனைக்கும் அம்மா ஆளுதான் அஜித், இருந்தும் இதற்காகவெல்லாம் அம்மாவை சந்திக்க முடியாது என்றும் படத்தை தைரியமாக தயாநிதி பேனரில் வெளியிடுங்க என்றும் கூறுகிறாராம் நம்ம தல.

மங்காத்தா வருமா? வராதா?

Thursday, 21 July 2011

சுப்பர் ஸ்டார் வீடுகளில் வருமான வரித்துறையின் அதிரடிச் சோதனை _


  சுப்பர் ஸ்டார் என்றவுடன் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த வீடுகளில் என்று எண்ணிவிட வேண்டாம் இது மலையாள சுப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன் லால் மற்றும் மம்முட்டி வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகளினால் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனை. 

இன்று காலை அதிரடியாக மோகன் லால் மற்றும் மம்முட்டி ஆகியோரின் சென்னை, கொச்சி மற்றும் பெங்களுரில் அமைந்துள்ள இவர்களது வீடுகளிலும் மற்றும் அலுவலகங்கள் மீதும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 

இச்சோதனை தொடர்பில் முறைப்படியான தகவல் எதனையும் இதுவரையில் வருமான வரித்துறையினரால் வெளியிடப்படவில்லை அத்துடன் குறித்த நடிகர்களுக்கும் இது தொடர்பில் சரியான முன்னறிவுப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இத் திடீர் சோதனையானது மலையான நடிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சோதனை மேற்கொண்டதற்கான காரணமும் தெரியாமல் விழிபிதிங்கி நிற்கின்றனர் மலையாளப்படவுலகினர். _

வெளிவருகிறது மர்லின் மன்றோவின் அந்தரங்கக் காட்சிகள் அடங்கிய குறும் படம்


  மறைந்த ஹொலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் அந்தரங்கக் காட்சிகள் அடங்கிய குறும் படமொன்றினை ஏலத்தில் விடவுள்ளதாக ஸ்பானிய பழையபொருட்களை சேகரிக்கும் நபரொருவர் தெரிவித்துள்ளார். 

இப்படம் தொடர்பாக பழம்பொருட்களை சேகரிக்கும் நபரான மைக்கல் பார்ஸா, 6 1/2 நிமிடங்கள் வரை உள்ள இவ்அந்தரங்க காட்சிகள் அடங்கிய வீடியோவின் மூலம் தான் 500,000 டொலர் பணத்தினை சம்பாதிக்க முடியுமெனவும் மேலும், எற்கனவே சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இப்படத்தின் 600,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். 

ஆனால், சினைவுச்சின்னங்கள் நிபுணர் ஸ்கொட் போர்னர் இவ் வீடியோ சம்மந்தமாக கூறுகையில் மக்கள் பழைய கையிருப்பு படங்கள் மூலம் இலகுவாக பணம் சம்பாதிக்கின்றனர் என்றும் இந்த வீடியோவில் காண்பிக்கப்படுவது மர்லின் மன்ரோ இல்லை எனவும் கூறுகிறார். 

எது எவ்வாறாயினும் இந்த குறும் படத்தின் மூலம் எப்படியும் மைக்கல் பார்ஸா பணம் சம்பாதிப்பார் என்பது மட்டும் திண்ணம்... 

Hot Toppics