குறித்த நீர்வீழ்ச்சியானது அப்பிரதேசத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்விடத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 3 பேர் திடீரென பெருக்கெடுத்த நீர் ஓட்டத்தால் அந்நீர்வீழ்ச்சியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்தனர்.
இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அவ்விடத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு அங்கு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
எனினும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அணையில் ஏற்பட்ட நீர்க் கசிவே இவ்வாறு திடீரென நீர் பெருக்கெடுத்தமைக்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தாமையே இதற்கான முக்கிய காரணமென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது மொத்தமாக ஐந்து பேர் அடித்துச் செல்லப்பட்டபோதும் அவர்களில் 2 பேர் பின்னர் காப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கேவலம்
ReplyDelete