Sunday, 17 July 2011

6.1 ரிக்டர் ஆக பதிவு: அமெரிக்காவில் நிலநடுக்கம்

கனடா அருகே அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உள்ளது. இங்கு பசிபிக் கடலில் உள்ள அலேடியன் தீவுகள் அருகே கடலோர பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நில நடுக்கம் அலேடியன் தீவில் பூமிக்கு அடியில் 48 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அது 6.1 ரிக்டர் அளவில் பதி வானதாகவும் அறிவித்தது. நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட காயம் மற்றும் சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த 3 வாரத்துக்கு முன்பு இதே பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அம்சிட்கா பாஸ் முதல் டச் துறைமுகம்வரை கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது விலக்கி கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

Hot Toppics