கடிகாரம் என்பது அத்தியாவசியமானதொன்று. அவசரமான உலகின் வேகத்தை அளவிடுகின்ற அற்புத கருவியாக கடிகாரம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. இப்படியிருக்கையில் கடிகாரங்களின் வடிவங்களும் புதிது புதிதாக வெளிவருகின்றன.
ஜப்பானின் 'டோக்கியோ பிளாஸ்' என்னும் கடிகார வடிவமைப்பு நிறுவனம் அண்மையில் புதியவகை கடிகாரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பார்ப்பதற்கு கைச்சங்கிலி போலிருக்கும். கையினை அழகுபடுத்துகின்ற கைச்சங்கிலி என்றே பார்ப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் அது கடிகாரமாகவும் செயற்படும். அந்த கைச்சங்கிலியில் இரண்டு பொத்தான்கள் இருக்கின்றன. அதில் ஒரு பொத்தானை ஒருதடவை அழுத்தினால் நேரத்தினை காட்டும். இன்னொருமுறை அழுத்தினால் மாதத்தினையும் திகதியினையும் காண்பிக்கும்.
சங்கிலிக் கோர்வையின் இடையில் பொருத்தப்பட்டிருக்கின்ற சிறிய LED திரைகளிலேயே இந்த நேரம் தென்படும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார்கள்.
130 அமெரிக்க டொலர்கள் (சுமார் 17 ஆயிரம் ரூபாய்) பெறுமதியில் இந்த கடிகாரங்கள் சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றன
Sunday, 17 July 2011
Subscribe to:
Post Comments (Atom)
Hot Toppics
-
தீவிர அஜீத் ரசிகர்களும் புள்ளி விபரப் புலிகளும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லலாம். ஒரு தெலுங்கு படம், ஒரு இந்திப்படத்துடன் இதுவரை அஜீத்...
-
மங்காத்தா தயாரிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில், தலையின் அடுத்த படமான பில்லா2 தயாரிப்பில்; அடியெடுத்து வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக ...
-
கனடா அருகே அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உள்ளது. இங்கு பசிபிக் கடலில் உள்ள அலேடியன் தீவுகள் அருகே கடலோர பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நில ந...
-
- சாதனைகளை பற்றி ஒருபோதும் நினைப்பதில்லை. எனது வெற்றியின் ரகசியமே அதுதான் இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்...
-
என் தாய் மொழியான பஞ்சாபி மாதிரி, தமிழும் பாரம்பரியமான மொழி. கத்துக்கறதுக்குதான் கஷ்டமா இருக்கு என்று சோனியா அகர்வால் சொன்னபோது அய்யோ பாவமாக ...
No comments:
Post a Comment