
ஸ்ரீ சத்ய சாய்பாபா உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி உயிர் இழந்தார். அவரது ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மகாசமாதி கட்டப்பட்டுள்ளது. சாய்பாபா உயிரோடு இருக்கையில் ஒவ்வொரு குருபூர்ணிமா தினத்தன்றும் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அதனால் பாபாவின் மகாசமாதி குருபூர்ணிமா தினமான இன்று பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
பாபாவின் சமாதியை தரிசிக்க பெருந்திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது சமாதி அருகே ஒரு பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பாம்பு சிறிது நேரத்தில் தானாகவே சென்றுவிட்டது.
முன்னதாக சாய்பாபா இறந்த அன்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சபாயாவின் வீட்டுக்கும் ஒரு பாம்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாபாவின் சமாதி திறக்கப்பட்டதில் இருந்தே அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment