Friday, 15 July 2011

இந்தோனேஷியாவில் எரிமலைக் குமுறல்

  இந்தோனேஷியாவில் சுலாவெஸி மாகாணத்தில் எரிமலையொன்று வெடித்துச் சிதறி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தோனேஷியாவின் சுலாவெஸிமாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள லோகொன் எனும் எரிமலை நேற்று இரவு வெடித்துச் சிதறியது. 

புகையுடன் கூடிய தீச்சுவாலையுடன் எரிமலைக் குழம்பையும் (லாவா) கக்குகின்றது. 

இதன்போது சுமார் 4800 அடி உயரத்திற்கு தூசு மற்றும் சிறுகற்களும் தெறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அங்கு நிலவும் அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு அப்பகுதியில் வசி்ப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். 

இவ்வெரிமலை இறுதியாக 1991இல் வெடித்தாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். 

இந்தோனேசியாவில் இது போன்ற எரிமலை வெடிப்புச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். _

No comments:

Post a Comment

Hot Toppics