Friday, 15 July 2011

ரஜினிக்காக கடவுளைப் பிரார்த்திக்கின்றேன் : ஏ.ஆர். ரகுமான்

சிறுநீரக பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரில் இருந்து பூரண குணமடைந்து நேற்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பளித்தனர்.  இந்நிலையில் சினிமா நட்சத்திரங்களும் சுப்பர் ஸ்டாரை நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் தனது டுவிட்டரில் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தை புகழ்ந்து தள்ளியுள்ளார் இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் இணையத்தத்தில் குறிப்பிட்டுள்ளதாவது

 என் வாழ்வில் முக்கிய தூண்டுகோலாக ரஜினிகாந்த் இருக்கிறார் மேலும் சூப்பர் ஸ்டார் விரைவில் முழு உடல்தகுதி பெற்று 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக ரகுமான் குறிப்பிட்டுள்ளார். ராணா படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி உள்ளதாக கூறிய ரகுமான், ரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Hot Toppics