Thursday, 21 July 2011

கென்யாவில் 5 டொன் சட்டவிரோத யானை தந்தங்கள் எரிப்பு _

சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு கென்யாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 5 டொன் யானை தந்தங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. சிங்கப்பூர், தான்சானியா ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக சுமார் 5 டொன் யானை தந்தங்கள் கென்யாவிற்கு கொண்டுவரப்பட்டன.

இவற்றினை கைப்பற்றினர் அந்நாட்டு போலீசார். அவற்றை ‌மொத்தமாக அடுக்கி வைத்து தீயிட்டு கொளுத்தும்படி அந்நாட்டு அதிபர் மிவாய் கிபாகி உத்தரவிட்டார்.

சிங்கப்பூர், தான்சானியா , மாலாவி ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான யானை தந்தங்கள் கென்யாவிற்கு விற்பனைக்காக ‌கடத்தி வரப்படுவதாக கென்யா அரசுக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி நேற்று 335 யானைகளிடமிருந்து ‌வெட்டி எடுக்கப்பட்ட 40 ஆயிரம் தந்தங்களை கென்யா அரசு பறிமுதல் செய்தது. கென்யாவின் தெற்கு மாகாணமான முன்யானி எனப்படும் பகுதியில் இந்த தந்தங்கள் ‌மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டன.

அதிபர் மிவாய்கிபாகி , முன்னிலையில் அவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதன‌ை அதிப‌ரே முன்னின்று நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், இனிமேல் கென்யாவிற்கு சட்டவிரோத வியாபார நடவடிக்கைகள் இருக்கக்கூடாது.

அது எதுவாக இருந்தாலும் சரி. அதற்கு முன்‌னோடியாக தான் இந்த யானை தந்தங்கள் எரிக்கப்பட்டன என்றார். இவற்றை தவிர தாய்லாந்து, நைஜிரீயா, காங்கோ ஆகிய நாடுகளிலும் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவதாக உலக வனப்பாதுகாப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

அதிகாரிகளின் கவனயீனத்தால் 3 பேர் நீர்வீழ்ச்சியில் அள்ளுண்டு மரணம் (காணொளி இணைப்பு)


  இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தோர் நகரில் அமைந்துள்ள பட்டல் பாணி நீர்வீழ்ச்சியில் அள்ளுண்டு 3 பேர் உயிரிழந்த சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நீர்வீழ்ச்சியானது அப்பிரதேசத்தில் மிக முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவ்விடத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 3 பேர் திடீரென பெருக்கெடுத்த நீர் ஓட்டத்தால் அந்நீர்வீழ்ச்சியில் விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்தனர்.

இச்சம்பவத்தின் காணொளி இணையத்தில் வெளியாகி பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அவ்விடத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு அங்கு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

எனினும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அணையில் ஏற்பட்ட நீர்க் கசிவே இவ்வாறு திடீரென நீர் பெருக்கெடுத்தமைக்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தாமையே இதற்கான முக்கிய காரணமென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தின் போது மொத்தமாக ஐந்து பேர் அடித்துச் செல்லப்பட்டபோதும் அவர்களில் 2 பேர் பின்னர் காப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

த்ரிஷாவுக்கு திருமணம்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா தற்போது தமிழில் "மங்காத்தா" தெலுங்கில் "பாடிகார்ட்" என இரு படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சும்மா இருந்தாலும் இவரைப்பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும் தற்போது வெளியாகியிருக்கும் தகவலானது இவரை கனவுக்கன்னியாக எண்ணிக்கொண்டிருக்ம் இளசுகளின் நெஞ்சை சற்று காயப்படுத்தக்கூடும்.

திரிஷாவுக்கு
பிறகு சினிமாவுக்கு வந்த பல நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இவருக்கு வயது ஏறுவதால் திருமணம் எப்போது என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திரிஷாவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே திரிஷாவின் தாய் உமாகிருஷ்ணன் ரகசியமாக வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

தொழில் அதிபர்கள், மருத்துவர்கள் என பல வரன்கள் பார்க்கப்பட்டன. இறுதியாக இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம். ஒருவர் அமெரிக்க மாப்பிள்ளை அங்கு தொழில் அதிபராக இருக்கிறார். இன்னொருவர் உள்ளூர் மாப்பிள்ளை. இருவரில் திரிஷா யாரை தேர்வு செய்கிறாரோ அவருடன் திருமணம் நடைபெறும்.
திரிஷாவுக்கு தற்போது தமிழில் "மங்காத்தா", தெலுங்கில் "பாடிகார்ட்" என இரு படங்கள் கைவசம் உள்ளன. வேறு புதுப்படங்களுக்கு ஒப்பந்தம் ஆகவில்லை. இரு படங்களையும் முடித்ததும் திருமண ஏற்பாடுகள் நடக்கும் என தெரிகிறது.

மாப்பிள்ளை தேர்வு செய்துள்ளது உண்மைதானா என்று திரிஷாவிடம் கேட்ட போது, வழக்கமாக நடிகைகள் மறுப்பது போலவே மறுத்தார்.
அவர் கூறுகையில்,"எனக்கு திருமணம் நடக்கப் போவதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை. எனக்கு பொருத்தமானவரை எப்போது சந்திக்கிறேனோ, அப்போதுதான் திருமணம் செய்து கொள்வேன்" என்றார்.


விஜயின் வேலாயுதத்தால் திணறும் தயாரிப்பாளர் _


  போட்ட பட்ஜெட்டை விட ரூ.10 கோடி அதிகமாகி விட்டதாம் விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். 

இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ராஜா இயக்குகிறார். 

இப்படத்திற்காக ஆரம்பத்தில் போடப்பட்ட பட்ஜெட் ரூ.35 கோடியாம். ஆனால் இப்போது படத்தில் கொம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பாடல்கள் பிரம்மாண்டம் அது, இது என்று ரூ.10 கோடி அதிகரித்து விட்டதாம். 

இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஓஸ்கார் ரவிச்சந்திரன் சற்று கலக்கத்தில் இருக்கிறாராம். ஆனால் அதே சமயம் இது விஜய் படம், கவலைப்படாதீர்கள் போட்ட காசுக்கு மேலாக எடுத்துவிடலாம் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருவதால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாராம். 

விஜய் படம் என்றாலே அதிரடி சண்டைக் காட்சிகள், கலக்கல் பாடல்கள், கொமெடி, காதல், செண்டிமெண்ட் என்று எல்லாமே இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். 

அதேபோல் இந்தபடத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாக்குகளை எண்ண வெளிமாவட்ட அதிகாரிகளை அனுமதிக்க கூடாது: த.தே.கூ. வேண்டுகோள் _

வாக்கு என்னும் பணிகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் 130 அதிகாரிகளை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தொடரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெற உள்ள உள்@ராட்சி சபை தேர்தலுக்கு வாக்கு எண்ணும் பணிகளுக்காக, அங்கு வருகைதரும் வெளிமாவட்ட அதிகாரிகளை நிறுத்த வேண்டும். அதேவேளை தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை இந்தப் பணியில் ஈடுபடுத்தவும் வேண்டும்.

மேலும் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக தற்காலிக அடையாள அட்டை வழங்கும் வழங்கப்படுகின்றது. இப்பணியானது இடைநிறுத்தப்படக் கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

நன்றி இணையம்

கூகுள் தேடல் பொறியை உபயோகிப்பவாரா?: கட்டாயம் இதைப் படியுங்கள்

இன்று நீங்கள் கூகுள் தேடல் பொறியை உபயோகப்படுத்தும் போது கீழ் காட்டப்படுள்ளவாறு ஓர் எச்சரிக்கை செய்தி தோன்றினால் உங்கள் கணனி 'மெல்வெயாரி'னால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதனைத் தெரிவித்தது நாங்கள் அல்ல கூகுள். 

ஆம், உங்கள் கணனி பாதிக்கப்பட்டதுள்ளதினையே கூகுள் இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது. 

இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட போலியான 'அண்டி வைரஸ்' மென்பொருட்களே உங்கள் கணனி பாதிக்கப்பட பிரதான காரணமென கூகுள் தெரிவிக்கின்றது. 

மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளையே 'மெல்வெயார்' தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது. 

இவ்வாறான தகவல் தோன்றினால் உங்கள் கணனியை உடனே பரீட்சிக்குமாறும் தேவையானால் சம்பந்தப்பட்ட விபரங்கள் மற்றும் ஆலோசனைகளை கூகுளிடமிருந்துபெற்றுக்கொள்ள முடியுமெனவும் அது குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக தகவல்களைக் கூகுளின் வலைப்பூவில்தெரிந்துகொள்ளலாம் _

Wednesday, 20 July 2011

சிறுத்தையின் தாக்குதலில் சிக்கிய வனந்துறை அதிகாரிகள்(பட இணைப்பு) _

  இந்தியாவின் பிரகாஸ் நாகர் எனும் கிராமத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்றை பிடிக்கச் சென்ற வனத்துறை அதிகாரிகளை சிறுத்தை சரமாரியாக தாக்கியுள்ளது.

இத்தாக்குதலில் வனந்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். 

இதனால் குறித்த பகுதியில் பெரும்பதற்ற நிலை காணப்பட்டது. எனினும் வனந்துறை அதிகாரிகள் சிறுத்தையின் தாக்குதலுக்கு மத்தியிலும் அதனை மடக்கி பிடித்தமை குறிப்பிடத்தக்கது. 







நன்றி இணையம்

ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக கத்ரீனா கபூர்.... _


  இயக்குனர் மதூர் பந்தாக்கர் தனது கனவுப்படமான ஹீரோயின் திரைப்படத்திற்கான ஹீரோயின் வேட்டை தொடர்கிறது. இப்படத்திற்காக முன்னர் ஐஸ்வர்யா ராயை கதாநாயகியாக அறிவித்திருந்தார் பின்னர் அவர் கர்ப்பமான செய்தியினால் அவரை நீக்கிவிட்டதாக தெரிவித்தார். இதற்கு ஐஸ்வர்யா ராய் தனது எதிர்ப்பை வெளியிட்டதோடு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார். 

இது இப்படி இருக்க மதூர் பந்தாக்கர் தனது ஹீரோயின் படத்திற்கு ஹீரோயின் வேட்டையை விடுவதாக இல்லை. தற்போது கத்ரீனா கபூரை மீண்டுமொரு முறை அணுகி அவரிடம் கதை கூறியிருப்பதாக அவரை நெருங்கிய சிலர் கூறுகின்றனர். இப்படத்திற்காக முதலில் பேசப்பட்டவர் கத்ரீனா கபூர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹீரோயின் படத்திற்கே ஹீரோயின் பிரச்சினை... _

வீடியோ சாட்(Video Chat)டில் புரட்சி செய்யும் மென்பொருட்கள்


இன்று வெப் கம் பாவித்து சாட் செய்யாதவர்கள் யாருமே இல்லை எனலாம். இவ்வாறு நாம் வெப் காமராவில் சாட்(webcam chat) செய்கின்ற போது கொஞ்சம் சுவாரசியமாக செய்தால் என்ன.. முக்கியமாக நாம் சிறுவர்கள் குழந்தைகளுடன் வெப்காமராவில் சாட்டிங் செய்யும் போது அவர்களை சந்தோசப்படுத்த காமாரா மூலம் பல விளையாட்டுக்களை காண்பிக்கலாம்.

இதற்கு பல சாப்வெயார்கள் இலவசமாகவே காணப்படுகிறது . இன்று நாம் பார்க்கப்போகும் மென்பொருளும் இவ்வாறான மாய வித்தைகளை காட்டக்கூடிய ஒன்றுதான் மெனி கம் (many cam)எனப்படும் இந்த மென்பொருளில் பல விளையாட்டுக்களை நீங்கள் செய்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்.



Windows Operating System பாவிப்பவர்கள் யாரும் இதை பயன்படுத்த முடியும். கீழுள்ள லிங்கில் சென்றால் இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Click Here

Tuesday, 19 July 2011

கூகுளில் முழுவதுமாக புத்தகத்தை தரவிறக்கம் செய்வதற்கு

கூகுள் வழங்கும் கூகுள் புக் சேவையில் தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
கூகுள் புக்ஸ் சேவையிலிருந்து புத்தகங்களை PDF மற்றும் JPEG வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்ய GOOGLE BOOK DOWNLOADER என்ற மென்பொருள் உதவுகிறது.
ANDROID மற்றும் IOS இயக்க முறைகளில் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்டதை வாசிக்க முடியும்.
இது விண்டோஸ் மற்றும் 2000, விஸ்டா, XP ஆகிய இயங்கு தளங்களில் செயற்படும்.
இந்த மென்பொருளை பயன்படித்தி கூகுள் புக் தளத்தில் இருந்து புத்தகங்களை தரவிறக்கம் செய்ய முடியும்.



Hot Toppics